சேமிப்பு கணக்கு - இப்போது டிஜிட்டல் முறையில் திறக்கவும்

சேமிப்பு கணக்கு - இப்போது டிஜிட்டல் முறையில் திறக்கவும்

ஒருவர் ஒரு வங்கி கணக்கைத் தொடங்க நினைக்கும் போதுஅவர் தேர்வு செய்யக்கூடிய மிகவும் பொதுவான வங்கிக் கணக்காக இருப்பது சேமிப்புக் கணக்கு ஆகும். ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதன் பின் இருப்பதற்கான காரணம்சிக்கனம் செய்வது அல்லது ஒருவரின் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே ஆகும். நீங்கள் HDFC வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் வெவ்வேறு வகை சேமிப்புக் கணக்குடன் சேர்ந்து வரும் பல்வேறு அம்சங்கள் மற்றும் பிரத்யேக சலுகைகள் மூலம் நீங்கள் பயனடையலாம். ஆன்லைன் மூலமாக சேமிப்பு கணக்கைத் தொடங்கும் செயல்முறையானது மிகவும் எளிதானது மற்றும் இதனை நம்மால் ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களிலேயே முடிக்க முடியும்.


இப்போது, வங்கி உட்பட கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம், கணக்கு வைத்திருக்கும் ஒருவர் HDFC வங்கியின் எண்ணற்ற கிளைகள் மற்றும் ATM-களுடன் கூடுதலாக, நெட்பேங்கிங் அல்லது எங்கள் மொபைல் பயன்பாட்டின் மூலம் தனது சேமிப்புக் கணக்கிற்கான அணுகலை 24x7 மணி நேரமும் பெற்றிடலாம். உங்களுக்கு டெபிட் கார்டு மூலம் கிடைக்கப்பெறும் பிரத்யேக நன்மைகள் மற்றும் சலுகைகளை, நீங்கள் முழுமையாக அனுபவித்திட முடியும். நீங்க அனுபவிக்கும் இதர விஷயங்களுள், வாழ்க்கைமுறை மற்றும் சுகாதார சேவை சார்ந்த பயன்களும் உள்ளடங்கும். சில வகை HDFC வங்கி சேமிப்புக் கணக்குகள், ATM-களில் பணத்தை எடுக்கும் எண்ணிற்கு வரம்பில்லை மற்றும் குறைந்தபட்ச(பூஜ்ஜியம்இருப்புத்தொகையை பராமரிக்கவே தேவையில்லை போன்ற அம்சங்களை வழங்குகின்றன. இவை சேமிப்புக் கணக்கின் மீதான கவனத்தைக் அதிகம் கவரக்கூடிய வகையில் உள்ளன.

எனவே நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? உங்கள் சேமிப்புப் பயணத்தை இனிதே தொடங்க, உடனடியாக HDFC வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்க விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

​​​​​​​

*ரெகுலர் சேவிங்ஸ், பெண்கள், சேவிங்ஸ்மேக்ஸ், மூத்த குடிமக்கள் மற்றும் டிஜிசேவ் யூத் கணக்கை டிஜிட்டல் முறையில் தொடங்கலாம்

நீங்கள் உடனடியாக உங்களுக்கு விருப்பமான சேமிப்பு கணக்கு ஒன்றைத் தொடங்குங்கள்!

  • பெண்கள், மூத்த குடிமக்கள், இளைஞர் மற்றும் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக கணக்குகள்
  • வீடியோ KYC உடன் விரைவான, டிஜிட்டல் முறையிலான மற்றும் காகிதமற்ற கணக்கு துவங்குதல முறையை அனுபவிக்கவும்
  • உங்கள் டெபிட்/ கார்டு, ஸ்மார்ட் பை(smartbuy) மற்றும் PayZapp மூலம் மாதாந்திர சேமிப்பு

ஸ்பெஷல் கோல்டு மற்றும் ஸ்பெஷல் பிளாட்டினம்

  • பிரீமியம் வாழ்க்கைமுறை நன்மைகளை அனுபவியுங்கள்
  • சிறந்த சுகாதார மற்றும் காப்பீட்டு பாதுகாப்பைப் பெற்றிடுங்கள்
  • லாக்கர்கள், டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கில் மேம்பட்ட பரிவர்த்தனை வரம்புகள் மீது முன்னுரிமை விலையினைப் பெற்றிடுங்கள்
  • கூடுதலான பரிவர்த்தனை வரம்புகள்

பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் கணக்கு (BSBDA) ஸ்மால்

  • பூஜ்ஜிய டெபாசிட், பூஜ்ஜிய இருப்புடன் கூடிய கணக்கை அனுபவித்திடுங்கள்
  • உங்கள் கணக்கை எளிதில் அணுகும்படியான இலவச ரூபே கார்டைப் பெற்றிடுங்கள்
  • ஒரு மாதத்திற்கு ATM-களில் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்

பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் கணக்கு

  • பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கை அனுபவித்திடுங்கள்
  • உங்கள் கணக்கை அணுக இலவச ரூபே கார்டைப் பெற்றிடுங்கள்
  • மாதம் ஒன்றிற்கு கிளையில் இலவசமாக 4 முறை பணம் எடுக்கும் வசதியைப் பெற்றிடுங்கள்

டிஜிசேவ் யூத் கணக்கு

  • உங்கள் அனைத்து தேவைகளுக்கான டிஜிட்டல் தளம்
  • முதல் ஆண்டு இலவச மில்லினியா டெபிட் கார்டு
  • அனைத்து பிரிவுகளிலும் ஆண்டு முழுவதுற்குமான சலுகைகள்

சேவிங் ஃபார்மர் கணக்கு

  • உங்கள் கணக்கை அணுக இலவச - ATM கார்டைப் பெற்றிடுங்கள்
  • HDFC வங்கி ATM-களில் 5 முறை பரிவர்த்தனைகளை இலவசமாக அனுபவித்திடுங்கள்
  • இலவச பில்பே வசதியுடன் கூடிய எளிதான கட்டண செயல்முறையைப் பெற்றிடுங்கள்

கவர்ன்மெண்ட் ஸ்கீம் பெனிஃபிசியரி சேவிங்ஸ் கணக்கு

  • உங்கள் வங்கித் தேவைகளுக்கு பொருந்தும் படியான பிரீமியம் டெபிட் கார்டைத் தேர்ந்தெடுங்கள்
  • மாதம் ஒன்றிற்கு ரூ.10 லட்சம் வரையிலான கூடுதல் ரொக்க பரிவர்த்தனை வரம்புகளை அனுபவித்திடுங்கள்
  • இலவச பில்பே வசதியுடன் கூடிய எளிதான கட்டண செயல்முறையைப் பெற்றிடுங்கள்

இன்ஸ்டிடியூஷனல் சேவிங்ஸ் கணக்கு

  • ரொக்க மேலாண்மை சேவைகள் மூலம் நன்கொடைகள் மற்றும் கட்டணங்களை நிர்வகித்திடுங்கள்
  • HDFC பேங்க் பேமெண்ட் கேட்வே ஈசி கலெக்ஷன் உடன் கணக்கை இணைத்திடுங்கள்
  • ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்துவதை ஆன்லைன் மூலம் எளிமைப்படுத்திடுங்கள்

ரெகுலர் சேமிப்புக் கணக்கு

  • இலவச தனிப்பயனாக்கப்பட்ட செக் புக்கைப் பெற்றிடுங்கள்
  • உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சர்வதேச டெபிட் கார்டுகளாகிய  மில்லினியா டெபிட் கார்டு அல்லது ரூபே பிரீமியம் டெபிட் கார்டிலிருந்து தேர்வு செய்யவும்
  • பில்பே சேவைமூலம் உங்கள் பில்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் செலுத்துங்கள்

கிட்ஸ் அட்வாண்டேஜ் கணக்கு

  • பாதுகாவலரின் ஒப்புதலுடன் குழந்தைகளுக்கான சர்வதேச டெபிட் கார்டைப் பெற்றிடுங்கள்
  • ₹1 லட்சம் மதிப்பிலான இலவச கல்வி காப்பீட்டைப் பெற்றிடுங்கள்
  • ஒவ்வொரு மாதமும் ₹1,000 சேமிப்பது மூலம் எதிர்கால நிதியை உருவாக்குங்கள்

சேவிங்ஸ்மேக்ஸ் கணக்கு

  • தானியங்கி ஸ்வீப்-இன் வசதியுடன், பயன்படுத்தப்படாமல் இருக்கும் பணத்திற்கு அதிக வட்டி பெறவும்
  • வாழ்நாள் முழுவதற்குமான பிளாட்டினம் டெபிட் கார்டு
  • விபத்து காரணமாக மருத்துவமனையில் ஆகும் செலவை திரும்பப் பெறுதலுக்கான ₹1 லட்சம் மதிப்பிலான காப்பீடு மூலம் பாதுகாப்பாக இருங்கள்
  • ATM-களில் இலவசமாக வரம்பற்ற அளவில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்

மூத்த குடிமக்களுக்கான கணக்கு

  • ஆண்டுக்கு ₹50,000 வரையிலான, விபத்து காரணமாக மருத்துவமனையில் ஆகும் செலவை  திரும்பப் பெறுதலுக்கான காப்பீட்டை பெற்றிடுங்கள்
  • 15 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் தினசரி ₹500 வரை கிளைம் செய்திடுங்கள்
  • நிலையான வைப்புத்தொகைகள் மீது விருப்பப்பட்ட வட்டி விகிதங்களை அனுபவித்திடுங்கள்

பெண்களுக்கான சேமிப்புக் கணக்கு/சேவிங்ஸ் அக்கவுண்ட்

  • உங்கள் அனைத்து செலவு மற்றும் தேவைகளுக்கும் ஈஸிஷாப் வுமன்'ஸ் டெபிட் கார்டைப் பெற்றிடுங்கள்
  • ஒவ்வொரு முறை ₹200 செலவு செய்யும் போது ₹1 வரை கேஷ்பேக்-ஆக பெற்றிடுங்கள்
  • இரு சக்கர வாகன கடன் மீது 2% குறைந்த வட்டி விகிதத்தை அனுபவியுங்கள்
FAQs

FAQs

1. சேமிப்பு கணக்கு என்றால் என்ன?

சேமிப்புக் கணக்கு என்பது தங்கள் வருவாயில் குறிப்பிட்ட ஒரு பகுதியை எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்பும் பலரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வைப்புக் கணக்கு ஆகும். இதுவும் ஒரு வகை வங்கிக் கணக்கே ஆகும். இதில் நீங்கள் உங்கள் நிதியை சேமிக்கலாம், அதற்கான வட்டியையும் சம்பாதிக்கலாம், எந்த நேரத்திலும் பணத்தை திரும்பப் பெறலாம். இது லிக்விட் ஃபண்டுகள் வசதியை வழங்குகிறது.

2. ஒருவர் ஆன்லைனில் சேமிப்பு கணக்கை எவ்வாறு தொடங்க முடியும்?

ஆன்லைன் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் செயல்முறை எளிதான மற்றும் மிகவும் சுலபமான ஒன்றாகும். உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கைத் தொடங்கும் செயல்முறையைத் தொடங்க இங்கே கிளிக் செய்யவும். HDFC வங்கியில், வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு வீடியோ KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) வசதியை நீங்கள் தேர்வு செய்யலாம்.  

3. சேமிப்பு கணக்கின் பல்வேறு வகைகள் யாவை?

HDFC வங்கியில் வெவ்வேறு வகையான சேமிப்புக் கணக்குகள் உள்ளன. அவற்றில் சில சேவிங்ஸ்மேக்ஸ் கணக்கு, ரெகுலர் சேவிங்ஸ் கணக்கு, டிஜிசேவ் யூத் கணக்கு, வுமன்'ஸ் சேவிங்ஸ் கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கு ஆகும். சேமிப்பு வங்கி கணக்கின் பல்வேறு வகைகளானது, எங்கள் பல்வேறு வாடிக்கையாளர் குழுக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன

4. ஒரு சேமிப்புக் கணக்கில் குறைந்த பட்சமாக எவ்வளவு பணம் இருக்க வேண்டும்?

குறைந்தபட்ச இருப்புத் தேவை அல்லது சராசரி மாதாந்திர இருப்பு (AMP) தேவை வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்கின் வகை மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் இருப்பிடம் போன்றவற்றிற்கேற்ப மாறுபடுகிறது. உதாரணத்திற்கு,  HDFC வங்கியில் ரெகுலர் சேவிங்ஸ் கணக்கு ஒன்றைத் தொடங்க குறைந்தபட்ச தொடக்க நிலை வைப்புத் தொகையானது - மெட்ரோ/நகர்ப்புற கிளைகளுக்கு ரூ.7500 ஆகவும், அரை நகர்ப்புற கிளைகளுக்கு ரூ.5,000 ஆகவும் மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு ரூ.2,500 ஆகவும் இருக்க வேண்டும்

5. சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதம் என்ன?

பொதுவாக இந்தியாவில் உள்ள வங்கிகள், சேமிப்பு கணக்குகள் மீது 3.5% முதல் 7%த்திற்கு நடுவே வட்டி விகிதத்தை வழங்குகிறது. HDFC வங்கி சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதம் பற்றி தெளிவாக அறிய கீழ் உள்ள பட்டியலை சரிப்பார்க்கவும்:

சேவிங்ஸ் வங்கி இருப்பு

  • ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல்
  • ரூ. 50 லட்சத்திற்கு கீழ்


 ஜூன் 11 , 2020இல் இருந்து செயல்பாட்டில் உள்ள திருத்தப்பட்ட வட்டி  விகிதம்

  • 3.50%
  • 3.00%

குறிப்பு:

  • உங்கள் கணக்கில் தினசரி இருக்கும் இருப்புகளின் அடிப்படையில் சேமிப்பு கணக்கின் வட்டி கணக்கிடப்படும்.
  • காலாண்டு இடைவெளியில் சேமிப்பு கணக்கு வட்டி செலுத்தப்படும்


6. சேமிப்பு கணக்கில் இருந்து ஒருவர் பணத்தை எவ்வாறு பரிமாற்றம் செய்ய முடியும்?

உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்ய ஒரு சில வழிகள் உள்ளன. முதலில், நீங்கள் உடனடியாக பணத்தை உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து வேறொரு நபரின் கணக்கிற்கு பரிமாற்றம் செய்ய பேங்கிங் மொபைல் ஆப்- பயன்படுத்தலாம். அடுத்து, நெட் பேங்கிங் வசதி மூலம் விரைவில் மற்றும் எளிதில் டிஜிட்டல் பயன்முறை வழியாக பணத்தை பரிமாற்றம் செய்யலாம். அதே போல் நீங்கள் வங்கியின் கிளைக்கு நேரடியாக சென்று உங்கள் கணக்கில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்யலாம்

7. ஒருவர் சிறந்த சேமிப்பு கணக்கை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

உங்கள் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமான ஒரு சேமிப்பு கணக்கைத்தேர்வு செய்வது மிகவும் அவசியம். HDFC வங்கியில், நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வெவ்வேறு சேமிப்பு வங்கி கணக்கு வகைகளை ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் தேவைகளுக்கேற்ற சிறந்த சேமிப்பு கணக்கு ஒன்றைத் தேர்வு செய்யலாம். சலுகை மீதான வட்டி விகிதங்கள், குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தேவைகள் மற்றும் பணம் எடுத்தல் தொடர்பான பல்வேறு தேவைகள் போன்ற முக்கியமான விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்
​​​​​​​

8. ஆன்லைனில் சேமிப்பு கணக்கைத் தொடங்க தேவையான ஆவணங்கள் யாவை?

HDFC வங்கி சேமிப்புக் கணக்கிற்கு விண்ணப்பிக்கும் போது ஒருவர் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • அடையாள சான்று (ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவை)
  • முகவரி சான்று (ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவை)
  • பான் கார்டு
  • படிவம் 16, இது விண்ணப்பதாரருக்கு வேலை வழங்குபவரால் வழங்கப்பட்ட சான்றிதழாகும், இது உங்கள் சம்பளத்தில் இருந்து TDS கழிக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்துகிறது. விண்ணப்பதாரருக்கு பான் கார்டு இல்லாவிட்டால் இது கண்டிப்பாக தேவைப்படும்.
  • இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்

அனுமதிக்கப்பட்ட அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • இந்தியத் தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை
  • செல்லுபடியாகும் நிரந்தர ஓட்டுநர் உரிமம்
  • ஆதார் கார்டு 
  • மாநில அரசு அதிகாரியால் கையொப்பமிடப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தால் (NREGA) வழங்கப்பட்ட வேலை அட்டை
  • பெயர் மற்றும் முகவரி விவரங்கள் அடங்கிய தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட கடிதம்

ஆதார், பான் கார்டு மற்றும் செயல்பாட்டில் உள்ள மொபைல் எண் மூலம் எளிதில் ஆன்லைன் கணக்கைத் தொடங்கலாம்​​​​​​​

Features and Benefits of HDFC Bank Account

Video KYC for Bank Account Opening

How to Open Savings Account Online?