1.HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட் ஜர்னி என்றால் என்ன?
- வங்கியின் இன்ஸ்டாஅக்கவுண்ட் ஜர்னி என்பது எந்த வித நேரடி தொடர்பும் இல்லாமல் எளிதில் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை தொடங்க உதவும் ஒரு முழுமையான டிஜிட்டல் பயணமாகும். வழக்கமான சேவிங்ஸ் அக்கவுண்ட் அல்லது பிரீமியம் சேவிங்ஸ்மாக்ஸ் அக்கவுண்ட் என எதுவாக இருந்தாலும், உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் உடனடியாகத் தொடங்கலாம். மேலும், உங்கள் கணக்கு எண் மற்றும் வாடிக்கையாளர் ஐடி-யை நீங்கள் உடனடியாக HDFC-ல் இருந்து பெறுவீர்கள்
- இன்ஸ்டாஅக்கவுண்ட் ஜர்னியின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ராடெக்ட் வேரியண்ட் பொறுத்து இருப்பு தேவை அமையும்
- உங்கள் கணக்கில் நெட் மற்றும் மொபைல் பேங்கிங் முன்னரே அமைக்கப்பட்டுள்ளது, அதாவது உங்கள் கணக்கில் பணத்தைச் டெபாசிட் செய்த உடனேயே உங்கள் HDFC வங்கி சேவிங்ஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தி நீங்கள் பேங்கிங்கைத் தொடங்கலாம்.
- இன்ஸ்டாஅக்கவுண்ட் ஜர்னி மூலம் தொடங்கப்பட்ட கணக்குகள் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும், ஏனெனில் இது ஒரு வரையறுக்கப்பட்ட KYC/கஸ்டமர் அடையாள செயல்முறையைப் பயன்படுத்துகிறது. இந்த நேரத்திற்குள், உங்கள் கணக்கை நீங்கள் டிஜிட்டல் முறையில் தொடங்கும் போது, அதனை உங்கள் விருப்பத்திற்கேற்ற ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஆக மாற்ற நீங்கள் ஏதாவதொரு கிளையை அணுகுவதன் மூலமோ அல்லது வீடியோ KYC-ஐத் தேர்வுசெய்வதன் மூலமோ உங்கள் KYC/வாடிக்கையாளர் அடையாள செயல்முறையை முழுவதுமாக முடிக்க வேண்டும்.
2.HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட்-இன் முக்கிய நன்மைகள் யாவை?
- இந்த கணக்கை 2 நிமிடங்களில் நீங்களே தொடங்கலாம்.
- உங்கள் கணக்கு எண் மற்றும் வாடிக்கையாளர் ஐடி-யை உடனடியாகப் பெறுவீர்கள்.
- உங்கள் கணக்கில் நெட் மற்றும் மொபைல் பேங்கிங் முன்னரே அமைக்கப்பட்டுள்ளது, அதாவது உங்கள் கணக்கில் பணத்தைச் டெபாசிட் செய்த உடனேயே நீங்கள் பேங்கிங்கைத் தொடங்கலாம்.
- இன்ஸ்டாஅக்கவுண்ட் மூலம் பில்கள் செலுத்துதல், பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல், HDFC வங்கி ATM-களில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட உங்கள் வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் எளிதில் செய்யலாம்.
- உங்கள் இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐப் பயன்படுத்தி ஃபிக்சட் டெபாசிட்டையும் தொடங்கலாம்
3.HDFC இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐ தொடங்குவது எப்படி?
- நீங்கள் HDFC இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐ துவங்க இங்கே கிளிக் செய்யலாம் அல்லது பிளேஸ்டோரிலிருந்து HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட் ஆப்-ஐப் பதிவிறக்கலாம்.
- பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் ஆதார் இருக்கும் வரை இந்த கணக்கை எளிதாகவும் உடனடியாகவும் தொடங்கலாம்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, உங்கள் ஆதாரைப் பயன்படுத்தி வேலிடேட் செய்யவும்.
4.இதனை எவ்வாறு பயன்படுத்துவது?
உங்களுடைய அக்கவுண்ட்டில் உங்களுக்கு நெட்பேக்கிங் முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் கடவுச்சொல்லை அமைப்பது தான். உங்கள் அக்கவுண்ட் நம்பரை பெற்றவுடன், ஸ்பிளிட் OTP-ஐ அடிப்படையாகக் கொண்டு உங்கள் IPIN-ஐ அமைக்கும் பொருட்டு உங்களுக்கு மின்னஞ்சலில் ஒரு லிங்க்/இணைப்பு வழங்கப்படும் (உங்கள் OTP-ன் ஒரு பகுதியை மின்னஞ்சலிலும், மற்றொரு பகுதியை மொபைலிலும் பெறுவீர்கள்). உங்கள் கணக்கைத் தொடங்கி, உங்கள் நெட்பேங்கிங் கடவுச்சொல்லை அமைத்தவுடன், வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தக் கணக்கில் பணத்தை எளிதாக மாற்றலாம். உங்கள் கணக்கு எண்ணைப் பெற்றவுடனே, உங்கள் சம்பளத்தை உங்கள் HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட்-ல் நீங்கள் வரவு வைத்துக் கொள்ளலாம். கணக்கைத் தொடங்கி நெட்பேங்கிங் கடவுச்சொல்லை அமைத்தவுடனேயே, நீங்கள் இந்த கணக்கைப் பயன்படுத்தி அனைத்து பேங்கிங் செயல்முறைகளையும் மேற்கொள்ளலாம்.
தகுதி
1.HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐ யார் தொடங்கலாம்?
ஏற்கனவே HDFC வங்கி கணக்கு இல்லாத மற்றும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள்
2.NRI-க்கள், HUF, தற்போதுள்ள HDFC வங்கி வாடிக்கையாளர்களால் HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐ தொடங்க முடியுமா?
இல்லை. NRI-க்கள், HUF, தற்போதுள்ள HDFC வங்கி வாடிக்கையாளர்களால் HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐ தொடங்க முடியாது.
3.இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐ ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் என்னால் தொடங்க முடியமா?
இல்லை. இந்த கணக்கை தனிநபர் ஒருவரால் மட்டுமே வைத்திருக்க முடியும்
டிரபுள் ஷூட்டிங் (Trouble-shooting ) / விண்ணப்ப செயல்முறை தொடர்பானது
4.விண்ணப்ப செயல்முறையில் ஒரு கிளையை தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டுள்ளது, அதற்கு நான் எதை தேர்வு செய்ய வேண்டும்?
உங்களுக்கு அருகாமையில் உள்ள ஒரு HDFC வங்கி கிளையைத் தேர்ந்தெடுக்கவும்
5.நான் HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட் விண்ணப்ப செயல்முறை லிங்க்-ல் கார்ப்பரேட் பெயரை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?
உங்கள் நிறுவனத்தின் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை உள்ளிட்டு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
6.என்னால் ஏன் ஆதார் OTP-ஐப் பெற முடியவில்லை?
அங்கீகரிப்பு/சரிபார்ப்புக்காக OTP-ஐப் பெற நீங்கள் உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை UIDAI/ஆதார் இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.
நீங்கள் நெட்வொர்க் நன்றாக கிடைக்கும் பகுதியில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
7.நான் பயன்படுத்தும் மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டாலும், என்னால் ஒரு கணக்கைத் துவங்க முடியுமா?
ஆம். உங்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற மற்ற அடையாள ஐடி சான்றுகளை கணக்குத் துவங்க நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும், இம்மாதிரியான தருணங்களில், உங்கள் கணக்கு எண்ணை நீங்கள் உடனடியாக பெற மாட்டீர்கள். எச்.டி.எஃப்.சி வங்கி கிளை குழு, உங்களின் கணக்கு எண் வழங்கப்படுவதற்கு முன் உங்களைத் தொடர்பு கொள்ளும்.
8.நான் பயன்படுத்தும் மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்படாமல் இருந்தால் என்னால் கணக்கைத் தொடங்க முடியுமா?
ஆம். உங்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிற ஐடி-களையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், அத்தகைய சந்தர்ப்பத்தில் உங்களால் கணக்கு எண்ணை உடனடியாக பெற முடியாது. கணக்கு எண் வழங்கப்படுவதற்கு முன்பு HDFC வங்கி கிளையின் குழு உங்களை தொடர்பு கொள்ளும்.
9.எனது மெயிலிங் மற்றும் நிரந்தர முகவரிகள் வேறாக இருக்கலாமா?
ஆம், உங்கள் மெயிலிங் மற்றும் நிரந்தர முகவரிகள் வேறாக இருக்கலாம்.
10.OTP ஆதார் சரிபார்ப்புக்கு எனது மெயிலிங் முகவரியை கட்டாயமாக வழங்க வேண்டுமா?
இல்லை, ஆதார் சரிபார்ப்புக்கு மெயிலிங் முகவரியை வழங்குவது கட்டாயமில்லை.
11.UIDAI/ஆதாரிலிருந்து பெறப்பட்ட விவரங்களை என்னால் மாற்ற முடியுமா?
UIDAI-இலிருந்து பெறப்பட்ட பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை உங்களால் மாற்ற முடியாது. இந்த விவரங்களைப் பயன்படுத்தி தான் உங்கள் கணக்கு தொடங்கப்படும்
12.ஆதார் அல்லாமல் மற்ற KYC ஆவணங்கள் மூலம் கணக்கைத் தொடங்க முடியுமா?
ஆம். ஆதார் கார்டின் நகல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர்கள் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்றவற்றின் மூலம் கணக்குகளைத் தொடங்கலாம். இருப்பினும், இந்த சந்தர்ப்பங்களில் உங்களால் உடனடியாக கணக்கு எண்ணைப் பெற இயலாது. கணக்கு எண் வழங்கப்படுவதற்கு முன்பு எச்.டி.எஃப்.சி HDFC வங்கி கிளையின் குழு உங்களை தொடர்பு கொள்ளும்.
13.PAN இல்லாமல் கணக்கைத் தொடங்க முடியுமா?
உங்கள் வருடாந்திர வருமானம் ரூ .2.5 லட்சத்தை விட அதிகமாக இருந்தால், உங்களுக்கு PAN/PAN அக்னாலேஜ்மென்ட் தேவைப்படும்.
14.இன்ஸ்டாஅக்கவுண்ட்-ஐத் தொடங்க ஆதார் கார்டின் நகல்/எண்ணை கட்டாயமாக வழங்க வேண்டுமா?
இல்லை, ஆதாரைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை. இருப்பினும், ஆதார் இருந்தால் உங்கள் விவரங்களை சரிபார்த்தல் விரைவாக நடப்பதால், இது உங்கள் செயல்முறையை விரைவாகவும் எளிமையாகவும் ஆக்குகிறது, மேலும், உங்கள் கணக்கு எண்ணை உடனடியாக ஆதார் மூலம் உங்களால் பெற முடியும்.
உங்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற KYC ஆவணங்களைப் பயன்படுத்துவது என்பது சற்று மெதுவான ஒரு செயல்முறையாகும், ஏனெனில் உங்கள் கணக்கு எண்ணைப் நீங்கள் பெறுவதற்கு முன்பு HDFC வங்கி உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
15.என் PAN கார்டின் நகலை பதிவேற்றுவது அவசியமா?
இல்லை, உங்கள் PAN கார்டின் நகலை பதிவேற்ற தேவையில்லை. உங்கள் PAN எண்ணைக் குறிப்பிடவேண்டும், அதுவே போதுமானதாக கருதப்படுகிறது.
16.நான் எவ்வாறு என் கணக்கு துவங்கப்பட்டுவிட்டது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்?
நீங்கள் ஒருவேளை உங்கள் ஆதாரை பயன்படுத்தி இருந்தால், உங்கள் கணக்கு எண்ணை உடனடியாக பெற்றிருப்பீர்கள். நீங்கள் வேறு அடையாள ஆவணங்களைப் உபயோகிக்கிறீர்கள் என்றால், பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வழங்கப்பட்ட குறிப்பு(ரெபரென்ஸ்) எண்ணை உபயோகித்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம் - –என் விண்ணப்பத்தைக் கண்காணிக்க
17.நான் எப்போது என் கணக்கு எண்ணை பெறுவேன்?
உங்கள் ஆதார் விவரங்கள் UIDAI யினால்(இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) ஆன்லைனில் சரிபார்க்க பட்டவுடன் உங்கள் வாடிக்கையாளர் ஐடி மற்றும் கணக்கு எண்ணை பெறுவீர்கள்.
நீங்கள் வேறு வகையான அடையாளத்தை(ஐடி) உபயோகித்திருந்தால், எங்கள் கிளைக் குழு உங்களைத் தொடர்பு கொண்ட பிறகே கணக்கு எண் வழங்கப்படும். அதற்கு காலதாமதம் ஆகலாம்.
18.நான் வேறு KYC ஆவணங்களை பயன்படுத்தினால் என்னால் உடனடியாக ஒரு கணக்கு எண்ணைப் பெற முடியுமா?
நீங்கள் ஆதார் எண்ணை தவிர வேறேதேனும் வகையான ஐடி பயன்படுத்தியிருந்தால் கணக்கு எண்ணை உடனடியாக பெற முடியாது. எங்கள் கிளையின் குழுவினால் அங்கீகாரம் / சரிபார்ப்பு செயல்முறை முடிவடையும் வரை உங்களுக்கு ஒரு குறிப்பு (ரெபரென்ஸ்)எண் வழங்கப்படும். இணைப்பைக் கிளிக் செய்து வழங்கப்பட்ட குறிப்பு (ரெபரென்ஸ்) எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம் -என் விண்ணப்பத்தைக் கண்காணிக்க.
19.செயலியின் இணைப்பு(ஆப் லிங்க்) இயங்கவில்லை / மெதுவாக இயங்கினால் என்ன செய்வது?
உங்களுக்கு கணக்கு துவங்கும் செயல்முறையை முடிக்க நல்ல நிலையில் செயல்படும் இணைய இணைப்பு தேவைப்படும்.
20.நான் என் கணக்கிற்கு பொருந்தக்கூடிய வரம்புகளை என்னால் கையாள முடியும் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
நீங்கள் பின்வருபவற்றை செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
1. உங்கள் கணக்கு இருப்பு எப்போதும் ரூ 1 லட்சத்தை தாண்டக்கூடாது
2. ஒரு நிதியாண்டில் உங்கள் கணக்கிற்கான வருடாந்திர பரிவர்த்தனை, 2 லட்சத்தை தாண்டக்கூடாது
1 வருடத்திற்கு உங்கள் கணக்கு செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் HDFC வங்கி கிளையுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் முழு KYCயை சமர்ப்பித்து உங்கள் விருப்பப்படி ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்டாக மாற்றலாம். அதன் பிறகு மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வரம்புகள் உங்களுக்கு பொருந்தாது, மேலும் HDFC வங்கியில் ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கு கிடைக்கவேண்டிய அனைத்து நன்மைகளையும் உங்களால் பெற முடியும்.
21.என்னால் இந்த கணக்கை ஸ்டாண்டர்ட் சேவிங்ஸ் அக்கவுண்ட்டாக மாற்ற முடியுமா?
ஆம், ஒரு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு அருகாமையிலிருக்கும் எங்கள் கிளையில் எங்களை தொடர்பு கொண்டால், உங்களது முழு KYC ஐயும் சமர்ப்பித்து இந்த கணக்கை ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட்டாக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.
22.எவ்வாறு என்னுடைய கணக்கை நெட்பேங்கிங் மூலம் அணுகுவது?
உங்கள் கணக்கு ஏற்கனவே நெட்பேங்கிங் இயக்கப்பட்ட நிலையில் துவங்கப்பட்டிருக்கும், நீங்கள் தான் அதை செயல்படுத்த வேண்டும். இதை எப்படி செய்வது என்பதற்கான அறிவுறுத்தல்களுடன் ஒரு SMS, இமெயில் உங்களுக்கு அனுப்பப்படும்.
23.ஒரு வாடிக்கையாளர் நெட்பேங்கிங்கிற்கு எவ்வாறு பதிவு செய்யலாம்?
நீங்கள் ஏற்கனவே நெட்பேங்கிங்கிற்கு முன்பதிவு செய்யப்படுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதற்கேற்ற கடவுச்சொல்லை அமைப்பது மட்டுமே ஆகும். உங்கள் IPIN அடிப்படையில் ஸ்ப்ளிட் OTPயை அமைக்க உங்கள் கணக்கு எண் உருவாக்கப்பட்ட உடன் உங்களுக்கு இமெயிலில் ஒரு இணைப்பு அனுப்பப்படும் (உங்கள் OTP இன் ஒரு பகுதியை இமெயிலிலும், உங்கள் OTP இன் மற்றொரு பகுதியை மொபைலிலும் பெறுவீர்கள்)
24.ஒரு வருடத்திற்குள் எனது HDFC வங்கியின் இன்ஸ்டாஅக்கவுண்ட்டை மாற்றாவிட்டால் என்ன ஆகும்?
உங்கள் கணக்கு தடை செய்யப்படும்.
25.நான் இந்த கணக்கின் மூலம் என்னென்ன வகையான பரிவர்த்தனைகளை செய்ய முடியும்?
- நீங்கள் பில்கள், ரீசார்ஜ் மற்றும் ஸ்கெட்யூல் பேமெண்ட்ஸ் ஆகியவற்றை செலுத்தலாம்
- ஆன்லைனில் ஷாப்பிங் செய்து பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தலாம்
- நீங்கள் பணத்தை பரிமாற்றம் செய்யலாம்
.
26.நான் KYC முழுவதையும் சமர்ப்பிக்கவும், என் கணக்கை மாற்றவும் கிளைக்குச் செல்ல வேண்டுமா?
ஆம், உங்கள் கணக்கை உங்கள் விருப்பப்படி ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்டாக மாற்ற அசல் KYC ஆவணத்தை சரிபார்க்க, நீங்கள் அவசியம் கிளையை அணுக வேண்டும்.
27.இந்தக் கணக்கைத் துவங்குவதற்கான கட்டணங்கள் யாவை?
இந்த கணக்கிற்கு எந்தவித கட்டணமும் கிடையாது.
28.எனது கணக்கைத் துவங்கும்போது நான் தேர்ந்தெடுத்த அக்கவுண்டில், துவங்கப்பட்ட பிறகு சேவிங்ஸ் / சேலரி அக்கவுண்டிற்கான அனைத்து அம்சங்களும் இருக்குமா? (எடுத்துக்காட்டு:ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் / வுமன்ஸ் அக்கவுண்ட் / சீனியர் சிட்டிசன்ஸ் அக்கவுண்ட்)
இல்லை, ஏதேனும் ஒரு HDFC வங்கியின் கிளையில் நீங்கள் KYC சமர்ப்பித்தலுக்கான அனைத்தையும் முறையே முடித்த பிறகே இந்த அம்சங்கள் உங்கள் கணக்கில் கிடைக்க துவங்கும்.
நான் HDFC வங்கியில் இன்ஸ்டாஅக்கவுண்ட்டை தொடர்ந்து
29.உபயோகிப்பதற்கான அதிகபட்ச காலம் எவ்வளவு?
நீங்கள் HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட்டை அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு உபயோகிக்கலாம். நீங்கள் இந்த ஒரு வருடத்திற்குள் முழு KYC ஐயும் பூர்த்தி செய்து இந்த கணக்கை ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்டாக மாற்றிக்கொள்ளலாம். இதை செயல்படுத்த உங்கள் அருகாமையில் இருக்கும் HDFC வங்கியின் கிளையை அணுகவும்.
30.நான் பணத்தை பரிமாற்றம் செய்ய/ எனது சம்பளத்தை கணக்கில் வரவு வைப்பதெற்கென ஏதேனும் குறிப்பிட்ட தேதி இருக்கிறதா?
இல்லை, இருப்பினும், கணக்கைப் பயன்படுத்தத் துவங்கிய (பொதுவாக 3 நாட்களுக்குள்) உடனே உங்கள் கணக்கிலிருந்து டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்யலாம்.
31.நான் டிஜிட்டல் முறையில் இந்த கணக்கை துவங்கினால் வங்கியிடமிருந்து என்னென்ன பயன்களை எதிர்பார்க்கலாம்?
நீங்கள் உங்கள் HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட்டின் எண் மற்றும் வாடிக்கையாளர் ஐடியை உடனடியாகப் பெறுவீர்கள். கணக்கு துவங்கும் செயல்பாட்டின் போது நாங்கள் உங்களுக்கு நெட் பேங்கிங்கை செயல்படுத்தும் ஒரு இணைப்பை அனுப்புவோம். கணக்கைத் துவங்கும்போது, நீங்கள் பண பரிமாற்றம் செய்ய விரும்பும் மூன்றாம் தரப்பினரை உறுதி செய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.
32.எனக்கு எப்போது காசோலை புத்தகம்(செக் புக்) மற்றும் டெபிட் கார்டு கிடைக்கும்?
HDFC வங்கி இன்ஸ்டாஅக்கவுண்ட் டெபிட் கார்டோ அல்லது காசோலை புத்தகத்தையோ(செக் புக்) வழங்காது. நீங்கள் டிஜிட்டல் முறையில் உங்கள் பணத்தை பெறுவது(வித்ட்ரா) உட்பட உங்களது அனைத்து பரிவர்த்தனைகளையும் நிர்வகிக்கலாம்.
33.என் HDFC வங்கி இன்ஸ்டா அக்கவுண்டிலிருந்து நான் எப்படி பணத்தை பெற முடியும்(வித்ட்ரா), அதற்கு ஏதேனும் கட்டணம் இருக்கிறதா?
நீங்கள் HDFC வங்கி ATMமிலிருந்து பணத்தை எடுக்க உங்கள் மொபைல் ஃபோனை உபயோகிக்கலாம். கார்டு இல்லாமல் பணத்தை பெறுவதற்கான விருப்பத்தை (Cardless Cash Withdrawal option)அழுத்தி அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
34.ஒருவேளை விண்ணப்ப படிவத்தின் செயல்பாட்டின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால், நான் மீண்டும் அதே இடத்திலிருந்து தொடர முடியுமா?
ஆம், உங்களால் தடை ஏற்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்க முடியும்.
35.என் கணக்கை முழு KYC அக்கவுண்டாக மாற்றுவது எப்படி?
நீங்கள் KYC முழுவதையும் சமர்ப்பிக்க கிளையை அணுக வேண்டும், மேலும் உங்கள் கணக்கை உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த ஒரு ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்டா
க வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
36.என் இன்ஸ்டாஅக்கவுண்டில் எனது இமெயிலை புதுப்பிக்க / மாற்ற முடியுமா?
இல்லை, உங்கள் இன்ஸ்டாஅக்கவுண்டுக்கான இமெயில் ஐடியை மாற்ற விரும்பினால், தயவுசெய்து அருகாமையில் இருக்கும் எதேனும் கிளைக்கு சென்று உங்களுடைய முழு KYC ஐயும் சமர்ப்பிக்க வேண்டும்.