Features
Eligibility
கீழ்க்கண்டவர்கள் பெண்களுக்கான சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு தகுதியுடையவர்களாவர்:
முதன்மையான கணக்கு வைத்திருப்பவர் பெண்ணாக இருக்க வேண்டும்
இந்தியாவில் குடியிருக்கும் தனிநபர்கள்(Resident individuals) (தனியான அல்லது கூட்டுக் கணக்கு)
இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு நபர்கள்*
*வெளிநாட்டு நபர்கள் இந்தியாவில் 180 நாட்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு இருப்பவராக இருத்தல் வேண்டும், மேலும் கீழ்க்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்: செல்லத்தக்க பாஸ்போர்ட், செல்லத்தக்க விசா, எஃப்.ஆர்.ஆர்.ஓ (வெளிநாட்டு மண்டல பதிவீட்டு அலுவலகம்/Foreign Region Registration Office) சான்றிதழ், மற்றும் குடியிருப்பு அனுமதி(Residential Permit)
தேவையான குறைந்தபட்ச இருப்புத்தொகை
பெண்களுக்கான சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கு, முதலில் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.10,000-ஐ மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் கட்ட வேண்டும், பாதி-நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகளில் ரூ.5000-உம், கிராமப்புற கிளைகளில் ரூ.2,500-உம் கட்ட வேண்டும்.
குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத்தொகையாக மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் ரூ.10,000-உம், பாதி-நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகளில் ரூ.5000-உம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை இல்லையென்றால், இருப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கு கீழ்க்கண்டவாறு கட்டணங்கள் விதிக்கப்படும்:
இருப்புத்தொகை பராமரிக்கப்படாததற்கான கட்டணங்கள்*
சராசரி குறைந்தபட்ச இருப்புத்தொகை(ஏ.எம்.பி/Average Minimum Balance) வரம்புகள் (ரூபாய்களில்) | மெட்ரோ மற்றும் நகர்ப்புறம் தேவையான ஏ.எம்.பி-ரூ10,000/- | பாதி நகர்ப்புறம்/கிராமப்புறம் தேவையான ஏ.எம்.பி-ரூ5,000/- |
>=7,500 முதல் <10,000 | ரூ.150/- | இதற்கு பொருந்தாது |
>=5,000 முதல் <7,500 | ரூ.300/- | இதற்கு பொருந்தாது |
>=2,500 முதல் <5,000 | ரூ.450/- | ரூ.150/- |
0 முதல் <2,500 | ரூ.600/- | ரூ.300/- |