Two Wheeler Loan

இந்த புராடெக்ட்-ஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 1

    ஃபிளெக்ஸி-ரீபே ஆப்ஷன்கள், 12-48 மாதங்கள் வரையில்

  • 2

    சிக்கல் இல்லை, விரைவான கடன் - உத்தரவாதி தேவையில்லை

  • 3

    ஹார்லெ டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு சிறப்பு திட்டங்கள்

அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்

Special Offers

    எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

    Contact Number
    Ahmedabad
    6160 6161

    டூ வீலர் கடன் குறித்த முழு தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமா

    Features

    எச்டிஎஃப்சி வங்கி கணக்கில் சில பிரத்தியேக சிறப்பம்சங்களும் நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும்

    • நீங்கள் வாங்கும் இடத்திலேயே 12 முதல் 48 மாதங்களுக்கான கடன் திருப்பி செலுத்துவதில் வசதியான வழிமுறைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்
    • சுலபமான EMIகள் உடன் பின் தேதியிட்ட காசோலைகளை அளியுங்கள்.
    • உங்கள் இஎம்ஐ தொகையை கணக்கிடுங்கள்.
    • சிக்கல் இல்லாத கடன் உதவி பெறுங்கள்
    • கியாரன்டர் யாரும் தேவையில்லை.
    • உங்கள் கடனுக்கு விரைவாக ஒப்புதலை பெறுங்கள்.
    • கிட்டத்தட்ட அனைத்து மாடல்களுக்கும் கவர்ச்சிகரமான வட்டி வீகிதத்தில் கடன் வழங்குகிறோம்.
    • உங்கள் டூ வீலர் கடன் ஒப்பளிக்கப் பட்டதும் அவ்வப்போது இலவச பரிசுகளையும் பெறுங்கள். (இலவச பரிசு வணிக ஊக்க திட்டங்களுக்கு இப் பகுதியை அவ்வப்போது பாருங்கள்)
    • உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறப்புத் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம்

    அதை எவ்வாறு பெறுவது?

    எச்டிஎஃப்சி டூ வீலர் கடன் பெற உங்களிடம் இருக்க வேண்டிய தகுதிகள்:

    • நீங்கள் சம்பளம் பெறுபவராக அல்லது சுயதொழில் புரிபவராக இருக்க வேண்டும்.
    • உங்கள் வயது 21 வருடங்கள் (விண்ணப்பிக்கும் போது) மற்றும் <=65 வருடங்களுக்கு (கடன் காலவரை இறுதியில்) இடைப்பட்டிருக்க வேண்டும்.
    • நீங்கள் மும்பை, தில்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, புனெ நகரங்களில் வசிப்பவரென்றால் உங்கள் ஒட்டுமொத்த வருட வருமானம் ரூ.54,000 /பிரதி வருடம் என்றும், வேறு இடங்கள் என்றால் ரூ.42,000 /பிரதி வருடம் என்றும் இருக்க வேண்டும்.
    • அந்த நகரத்தில் குறைந்த பட்சம் 1 வருடம் வசித்துக் கொண்டிருக்க வேண்டும்.
    • குறிப்பிட்டிருக்கும் வசிப்பிடத்தில் குறைந்தது 1 வருடமாக வசித்துக் கொண்டிருக்க வேண்டும் (நீங்கள் வேறு இடத்திலிருந்து பணி நிமித்தம் மாற்றலாகி வந்திருந்தால், அதனால் தற்போதைய வசிப்பிடத்தில் 1 வருடத்திற்கும் குறைந்திருக்கிறது என்றால் - கடன் ஒப்புதல் நிலையிலேயே தோதான ஆதாரங்களை வங்கியில் சமர்ப்பியுங்கள்).
    • கடந்த 1 வருடமாக பணியில் இருக்க வேண்டும்.
    • உங்கள் வசிப்பிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ போன் வசதி இருக்க வேண்டும்.

    எச்டிஎஃப்சி வங்கி டூ வீலர் கடனுக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், கீழே காணப்படும் ஆவணங்களைத் தாக்கல் செய்து கடன் வசதிக்கு விண்ணப்பிக்கலாம்.

    • அடையாள அத்தாட்சி:
      பாஸ்போர்ட் நகல்/ புகைப்படம் இருக்கும் கிரிடிட் கார்ட் முன்பக்கம் & பின்பக்கம்/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுனர் உரிமம்/ பான் கார்ட்/ எம்என்சி/ பொது நிறுவனம்/ பிஎஸ்யூ/ அரசு நிறுவன அடையாள கார்ட் நகல்/ ரேஷன் கார்ட் (அதில் புகைப்படம் இருந்தால்) இவற்றில் ஒன்று.
    • முகவரி அத்தாட்சி:
      பாஸ்போர்ட் நகல்/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுனர் உரிமம்/ வாடகை ஒப்பந்தம்/ டெலிபோன் பில்/ எலக்டிரிசிடி பில்/ கேஸ் கனெக்‌ஷன் பில்/ ரேஷன் கார்ட்/ விற்பனை ஒப்பந்தம்/ சொத்து வாங்கிய ஒப்பந்தம்/ கிரிடிட் கார்ட் பில்லிங் அறிக்கை (சமீபத்தியது)/ எல்ஐசி பாலிசி/ நிறுவனத்திலிருந்து கடிதம் அல்லது நிறுவனம் அளித்திருக்கும் வசிப்பிடம் (வங்கியின் பட்டியல் பிரகாரம் நிறுவனங்கள் - எம்என்சி/பொது நிறுவனம்/பிஎஸ்யூ/ அரசு நிறுவனம் கடிதத்தில் வசிப்பிட முகவரி எழுதப் பட்டது), விண்ணப்பதாரரின் வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோர்கள் பெயரிலிருக்கும் முகவரி சான்று ஆவணம் ஏற்றுக்கொள்ளத் தக்கது.
    • வருமான அத்தாட்சி:
      சம்பளக்காரர்களுக்கு: அரசு பணியாளர்கள் என்றால் சமீபத்திய சம்பள ரசீது; சம்பள ரசீது இல்லை என்றால், சம்பள சான்றிதழில் பிடித்தங்கள் எழுதப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளப் படும், பார்ட்னர்ஷிப்/ புரொப்ரைட்டரி நிறுவனங்கள் & பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் - சம்பள ரசீதுகளில் கீழ்க்கண்டவை கட்டாயம் இருக்க வேண்டும்: சம்பள சான்றிதழில் பிடித்தங்கள், கையெழுத்திட்டிருப்பவரின் பெயர் மற்றும் பதவிப் பெயர் தெளிவாக எழுதப் பட வேண்டும்,
      சுயதொழில் செய்வோருக்கு:சமீபத்திய வருமான வரி அறிக்கை நகல்

    என்னென்ன சிறப்புத் திட்டங்கள் கிடைக்கின்றன?

    உங்கள் தேவைகளுக்கு ஏற்ற டூ வீலர் கடன் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம்.

    நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் செலவினங்கள் என்னென்ன?

    Ungal டூ வீலர் கடன் வசதிக்கான அனைத்து பொருந்தும் கட்டணங்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது:

    கட்டண விபரங்கள் டூ வீலர் கடன்கள்
    டூ வீலர் கடன்கள்
    14.50% முதல் 30.00% ஐஆர்ஆர் வரை
    கடன் பரிசீலனை கட்டணங்கள் அதிகபட்சம் 4% கடன் தொகையில் அல்லது ரூ.600/- இவற்றில் எது அதிகமோ அது
    முன்னரே செலுத்தி விடுவதற்கான கட்டணங்கள்
    • முதல் இஎம்ஐ யிலிருந்து 7 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையில் - அசல் நிலுவையில் 6%
    • முதல் இஎம்ஐ யிலிருந்து 13 - 24 மாதங்கள் வரையில் - அசல் நிலுவையில் 5%
    • முதல் இஎம்ஐ யிலிருந்து 24 மாதங்கள் கழிந்த பின் - அசல் நிலுவையில் 3%
    • EMI கடன் திருப்பு செலுத்துதலில் முதல் ஆறு மாதங்களில் முன்னரே செலுத்த அனுமதியில்லை.
    நிலுவை பாக்கியில்லை சான்றிதழ் / மறுப்பின்மை சான்றிதழ் (என்ஓசி) இல்லை
    நிலுவை பாக்கியில்லை சான்றிதழ் / என்ஓசி ரூ.500/-
    செல்வ நிலைச் சான்றிதழ் பொருந்தாது
    EMI தாமதித்துச் செலுத்தும் கட்டணங்கள் 2.5% பிரதி மாதத்துக்கு செலுத்தப்படாத தவணைகள் மீது
    நிலை வட்டியிலிருந்து நடப்பு வட்டிக்கு மாறும் கட்டணங்கள் பொருந்தாது
    நடப்பு வட்டியிலிருந்து நிலை வட்டிக்கு மாறும் கட்டணங்கள் பொருந்தாது
    முத்திரை தீர்வை & இதர கட்டணங்கள் உரித்தாகும் மாநில சட்ட விதிகளின்படி
    கடன் தொகை மதிப்பீடு கட்டணங்கள் வரம்பு ரூ. 750/-
    பணம் திருப்பு செலுத்துவதில் பொதுவானவை அல்லாத ரூ. 250/-
    வெளியூர் கிளியரிங் கட்டணங்கள் ரூ.25/- பிரதி காசோலை
    காசோலை பரிமாற்ற (swapping) கட்டணங்கள் ரூ.500/-
    கடன் ரத்துசெய்தல் / மறுபதிவு கட்டணங்கள் ரூ. 1000/-
    காசோலை திருப்பப்படுதல் / இஎம்ஐ திருப்புதல் கட்டணங்கள் ரூ. 450/-
    சட்டச் செலவு, மறு-உடைமை & இதர செலவுகள் உள்ளபடி
    சுரக்‌ஷா கவச் நடவடிக்கை கட்டணம் வழங்கப்படும் பிரதி கவர் நோட்டுக்கு கட்டணம் ரூ.100/-
    சிறப்பு என்ஓசி ஒரு கோரிக்கைக்கு ரூ.100/-
    பிடிடி கட்டணங்கள் வரம்பு ரூ. 125/- வரை
    CIBIL கட்டணங்கள் (கோரும்போது மட்டும்) ரூ. 50

    ஃபீஸ் வகையாகக் காட்டப்பட்டிருக்கும் கட்டணங்களில் சேவை வரியும் அடக்கம்.

    குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ளவை ஒவ்வொரு வகை கட்டணங்களுக்கும் உரித்தாகும் அதிகபட்ச கட்டணங்கள்.

    Have questions?

     
    Banner

    Get more than you'll ever need with a SavingsMax Account

    Apply Online

    Special offers

      PreviousNext